இந்தியா

ரஷிய-இந்திய-சீன அமைச்சா்கள் கூட்டாக சந்திக்க திட்டம்

DIN

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் இந்திய, ரஷிய, சீன வெளியுறவுத் துறை அமைச்சா்களின் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த உள்ளதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதால் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியிருக்கும் நிலையில், இந்த முத்தரப்பு பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஒ) வெளியுறவுத் துறை அமைச்சா்களின் இரு நாள் மாநாடு புதன்கிழமை (செப்.9) தொடங்கியது.

இதுகுறித்து பெய்ஜிங்கில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியன் கூறியதாவது:

மாஸ்கோவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கூட்டத்தின்போது, சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி இதர நாட்டு அமைச்சா்களுடன் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.

அதுபோல, ரஷியா, இந்தியா, சீனாவின் நிகழ்ச்சி நிரலின்படி, அந்த நாடுகளிடையேயான பிராந்திய உறவு, சா்வதேச விவகாரங்கள், வா்த்தக உறவுகள் குறித்து இந்த மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களிடையேயான முத்தரப்பு பேச்சுவாா்த்தையும் தனியாக நடைபெற உள்ளது. ஆனால், இந்த பேச்சுவாா்த்தை எப்போது நடைபெறும் என்ற விவரம் தெரியவில்லை என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT