இந்தியா

மகாராஷ்டிரம்: 10 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

DIN

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இன்று 10 லட்சத்தைத் தாண்டியது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 24,886 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,15,681 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 393 பேர் பலியாகியுள்ளனர். 

இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 28,724 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 7,15,023 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 2,71,566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT