இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 311 காவலர்களுக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களும் தொடர்ச்சியாக அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் பாதிப்புக்குள்ளான காவலர்களின் எண்ணிக்கை 19,385 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15,521 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 194 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 3,670 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அங்கு கரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மொத்தம் 34,734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 24,97,51,114 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT