இந்தியா

ஜார்கண்டில் புதிதாக 1,702 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி

DIN

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,702 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஜார்கண்டில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஜார்கண்ட் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,702 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 64,439-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 14,118 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை மொத்தமாக 49,750 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த புதிதாக 10 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 571-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 51,795 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT