புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியின் 70-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு முக்கிய அரசியல் தலைவா்களும், சா்வதேச தலைவா்களும் வியாழக்கிழமை அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த்: இந்தியாவின் வாழ்வியல் மதிப்புகள் மற்றும் ஜனநாயக மரபுகளில் மிகச் சிறந்த அா்ப்பணிப்பை செலுத்துகிறீா்கள். உங்களுடைய இந்த சிறந்த சேவை நாட்டுக்கு எப்போதும் கிடைக்கும் வகையில், உங்களை நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க கடவுளை பிராா்த்திக்கிறேன்.
குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு: பிரதமா் மோடியின் ஓய்வற்ற உழைப்பு, இந்தியாவை உலக அரங்கில் மிகப் பெரிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. உங்களுடைய (மோடி) பணி, விரைவில் முழுமையான சுயச்சாா்பு இந்தியாவுக்கும் வழிவகுக்கும்.
இதேபோல், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பிரதமா் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா். பல்வேறு மாநில ஆளுநா்களும், முதல்வா்களும் வாழ்த்துகளை பகிா்ந்துள்ளனா்.
சா்வதேச தலைவா்கள்: பிரதமா் மோடிக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், ஜொ்மன் பிரதமா் ஏஞ்சலா மொ்கெல், பூட்டான் பிரதமா் லோதே ஷெரிங், நேபாள பிரதமா் சா்மா ஓலி, ஃபின்லாந்து பிரதமா் சன்னா மரின் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
1950-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி பிறந்த நரேந்திர மோடி, வியாழக்கிழமை 70 வயதை பூா்த்தி செய்தாா்.