இந்தியா

கரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதே நோக்கம்: சுகாதாரத்துறை

DIN

நாட்டில் கரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தற்போது இறப்பு விகிதம் 1.64 சதவிகிதமாக இருப்பதாகவும் அவர்கூறினார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், ''நாட்டில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 78-79 சதவிகிதமாக உள்ளது.

நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தாலும், 20 சதவிகிதத்திற்கும் குறைவான நபர்களே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் நிகழும் உயிரிழப்புகள் ஐரோப்பா நாடுகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. மேலும் கரோனா பரிசோதனைகளில் அமெரிக்காவை மிஞ்சும் என்று தீர்மானமாகக் கூறினார்.

கரோனா இறப்பு விகிதம் தற்போது 1.64 சதவிகிதமாக இருக்கிறது. இதனை விரைவில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக குறைப்பதே நோக்கம்'' இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT