இந்தியா

கேரளத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

DIN

கேரளத்தில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி வருவதால் கேரளத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது.

செப்டம்பர் 19 ஆம் தேதி கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களிலும், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களிலும் செப்டம்பர் 20 ஆம் தேதியிலும், செப்டம்பர் 21 ஆம் தேதி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களிலும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 18 முதல் 22 வரை கடலில் மணிக்கு 45 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT