சத்தீஸ்கரில் ஆயுதப்படை வீரரை கடத்தி கொலைசெய்த மாவோயிஸ்டுகள்
சத்தீஸ்கரில் ஆயுதப்படை வீரரை மவோயிஸ்டுகள் கடத்தி கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் ஆயுதப்படை வீரரை மவோயிஸ்டுகள் கடத்தி கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுதப்படை வீரர் மல்லுரம் சூர்யவன்சி. இவர் பிஜப்பூர் மாவட்டம் பட்டேடா கிராமத்தில் கடந்த 7 தினங்களுக்கு முன்பு
காணாமல் போனார். இதையடுத்து அவரை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை வீரரை கொலை செய்து அவரது உடலை கங்காலூர்-பிஜப்பூர் சாலையில்
மாவோயிஸ்டுகள் வீசிச் சென்றுள்ளனர்.
உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.