முகப்பு
இந்தியா

அடுத்த 3 நாள்களுக்கு ஆந்திரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 3 நாள்களுக்கு ஆந்திரத்தில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Updated On : 19 செப்டம்பர், 2020 at 4:20 PM
பகிர்:

அடுத்த 3 நாள்களுக்கு ஆந்திரத்தில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ஏனம், ராயலசீமா, வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையோர ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்கில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேசமயம், கிருஷ்ணா மாவட்டம், ஏனம், கிழக்கு மற்று மேற்கு கோதாவரி மாவட்டகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

மேலும் கடப்பா மற்றும் கர்னூல் மாவட்டங்களிலும் இதே வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், விஜியநகரம், விசாகப்பட்டிணம், குண்டூர், பிரகாசம், அனந்தபூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அதேநேரத்தில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையும் இதே வானிலை நிலவும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.