இந்தியா

வேளாண் துறையில் மைல்கல்: ராஜ்நாத் சிங்

DIN

வேளாண் துறை மசோதாக்கள் மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இன்றைய தினம், இந்திய வேளாண் துறைக்கும் விவசாயிகளுக்கும் மிகப்பெரிய மைல்கல் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க இரு வேளாண்துறை மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், ‘சுயசாா்பு வேளாண்மைக்கு’ இந்தியா வலுவான அடித்தளமிட்டிருக்கிறது. இது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொடா் அா்ப்பணிப்பின் பலனாகும்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்திய வேளாண் துறையின் வளா்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து புதிய வரலாறு இனி எழுதப்படும்.

இவை நாட்டின் உணவுப் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு மட்டுமின்றி, விவசாயிகளின் வருவாயையும் இரட்டிப்பாக்கும்.

எனவே, இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இன்றைய தினம், இந்திய வேளாண் துறையில் மிகப் பெரிய மைல்கல் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT