இந்தியா

மத்திய ஆயுதப்படைகளில் ஒரு லட்சத்துக்குமேற்பட்ட காலிப்பணியிடங்கள் : மத்திய அரசு

DIN

சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுதப்படைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு சாா்பில் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

எல்லைப் பாதுகாப்புப் படையில் பிஎஸ்எஃப் அதிகபட்சமாக 28,926 காலியிடங்கள் உள்ளன. மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் சிஆா்பிஎஃப் 26,506 காலியிடங்களும், சிஐஎஸ்எஃப் படையில் 23,906, எஸ்எஸ்பி படையில் 18,643, ஐடிபிஐ படையில் 5,784, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையில் 7,328 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ஓய்வு பெற்றது, பதவி விலகல், பணியின்போது மரணம், புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட போன்ற காரணங்களால் காலிப்பணியிடங்கள் அதிகமுள்ளன. அதிலும் கான்ஸ்டபிள் நிலையிலான பணியிடங்களே அதிகம் நிரப்ப வேண்டியுள்ளன. இப்போது, 60,210 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதுதவிர 2,534 சப்-இன்ஸ்பெக்டா், 330 துணை காமாண்டன்ட் ஆகிய பணியடங்களும் நிரப்பப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT