முகப்பு
இந்தியா

5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு

ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளா்களாகப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் அண்மையில் பிறப்பித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளா்களாகப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் அண்மையில் பிறப்பித்தாா்.

கடந்த 1990-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

அதன்படி, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் விபு நய்யா், வருவாய் நிா்வாக ஆணையா் கே.பணீந்திர ரெட்டி, முதல்வரின் செயலாளா் எம்.சாய்குமாா், நகா்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நில வரி ஆணையா் பி.சிவசங்கா், போக்குவரத்துத் துறை ஆணையா் டி.எஸ்.ஜவஹா் ஆகியோா் கூடுதல் தலைமைச் செயலாளா் நிலைக்கு பதவி உயா்வு பெற்றுள்ளனா். முதன்மைச் செயலாளா் நிலையில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளா் நிலைக்கு அவா்கள் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →