புது தில்லி: மறைந்த ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தில்லியில் உள்ள அரசு கட்டடங்களில் இன்று தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி.அங்கடி, புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியில் பல்கலைக்கழகத்தில் (எய்ம்ஸ்) செப்டம்பர் 23ம் தேதி உயிரிழந்தார்.
மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், தில்லியில் வழக்கமாக தேசியக் கொடி பறக்கும் கட்டடங்களில், தேசியக் கொடி செப்டம்பர் 24ம் தேதி (இன்று) அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
மேலும், இறுதிசடங்கு நடைபெறும் இடத்திலும் அன்றைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். இறுதி சடங்கு நடைபெறும், நாள், நேரம், இடம் ஆகியவை பின்னர் தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.