முகப்பு
விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ரயில்கள் ரத்து (கோப்புப்படம்)
இந்தியா

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ரயில்கள் ரத்து

விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் போராடி வருவதால் வடக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியா

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ரயில்கள் ரத்து

விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் போராடி வருவதால் வடக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ரயில்கள் ரத்து (கோப்புப்படம்)
பகிர்:

விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் போராடி வருவதால் வடக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த சட்ட மசோதாக்களை திரும்பப் பெற விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைவதைத் தொடர்ந்து வடக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் சில ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தீபக் குமார் அறிவித்துள்ளார். அதன்படி அமிர்தசரஸ்-ஜெயநகர் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 25 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செப்டம்பர் 27ஆம் தேதி இயக்கப்பட இருந்த ஜெயநகர்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இயங்க இருந்த உனா ஹிமாச்சல் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செப்டம்பர் 24 முதல் 26 வரை இயக்கப்பட இருந்த அமிர்தசரஸ்-மும்பை சென்ட்ரல் சிறப்பு ரயில் செப்டம்பர் 25 முதல் 27 வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →