வேளாண் மசோதா: பிகாரில் ஆர்.ஜே.டி. கட்சியினர் டிராக்டர் பேரணி 
இந்தியா

வேளாண் மசோதா: பிகாரில் ஆர்.ஜே.டி. கட்சியினர் டிராக்டர் பேரணி

வேளாண் மசோதாக்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில், ராஷ்டிர ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வினி யாதவ் டிராக்கர் இயக்கி ஆதரவு தெரிவித்தார்.

DIN

வேளாண் மசோதாக்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில், ராஷ்டிர ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வினி யாதவ் டிராக்கர் இயக்கி ஆதரவு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ராஷ்டிர ஜனதா தள கட்சியின் சார்பில் வேளாண் மசோதாவுக்கு எதிராக டிராக்டர் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வினி யாதவ் டிராக்டர் இயக்கி எதிர்ப்பை பதிவு செய்தார்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாய மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிகார் மாநிலம் பாட்னா சாலையில் ராஷ்டிர ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வினி தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சித்தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் பாட்னா சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT