சிரோமணி அகாலிதளத்திற்கு தெளிவான நிலைப்பாடு இல்லை: வேளாண் மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு 
இந்தியா

'சிரோமணி அகாலி தளத்திற்கு தெளிவான நிலைப்பாடு இல்லை'

வேளாண் மசோதாவில் சிரோமணி அகாலி தளத்திற்கு தெளிவான நிலைப்பாடு இல்லை என்று கடந்த மூன்று நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

வேளாண் மசோதாவில் சிரோமணி அகாலிதளத்திற்கு தெளிவான நிலைப்பாடு இல்லை என்று கடந்த மூன்று நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் விவசாயிகள் மூன்று நாள்களாக ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாநிலத்தில் முக்கிய ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்று வருவதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பேருந்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாய சங்கங்கள் கலந்துகொண்டு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே இது குறித்து பேசிய கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு தலைவர் 
எஸ்.எஸ். பாந்தர், அமிர்தசரஸ் பகுதியில் மூன்றாவது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்கள் திரும்பப் பெற வேண்டும்.

மேலும் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலிதளத்தை சேர்ந்த அமைச்சர் தமது பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால் வேளாண் மசோதாவில் அக்கட்சியின் நிலைப்பாடு முரணாக உள்ளது.

அவர்கள் தங்கள் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க முயற்சி செய்கிறார்கள் விவசாயிகள் பிரச்சனையில் அரசியல் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

SCROLL FOR NEXT