இந்தியா

ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

​ஜம்மு-காஷ்மீரில் ஹிந்தி, காஷ்மீரி, டோக்ரி ஆகியவற்றை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

DIN


ஜம்மு-காஷ்மீரில் ஹிந்தி, காஷ்மீரி, டோக்ரி ஆகியவற்றை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே ஆங்கிலமும், உருதுவும் அலுவல் மொழிகளாக உள்ளன. தற்போது, மேலும் 3 மொழிகள் அலுவல்கள் மொழிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி, "ஜம்மு-காஷ்மீரில் 74 சதவிகிதத்தினர் காஷ்மீரியையும், டோக்ரியையும் பேசுகிறார்கள். ஹிந்தியை 2.3 சதவிகிதத்தினரும், உருதுவை 0.16 சதவிகிதத்தினரும் பேசுகிறார்கள். எனவே, மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்கள் பேசும் மொழிகள், அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

SCROLL FOR NEXT