இந்தியா

ஜம்மு-காஷ்மீா் அலுவல் மொழிகள் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

DIN

காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி ஆகிய மொழிகளை ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே, உருதுவும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக உள்ளன. இந்த காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி மொழிகளுக்கும் அலுவல் மொழி அந்தஸ்து அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளாா்.

கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி இதற்கான ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டாா் என்று அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபிகள் ஏராளமானோா் ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலமாக வசித்து வரும் நிலையில், பஞ்சாபி மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை இருந்து வருகிறது. எனினும் அது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT