வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 7வது நாளாக போராட்டம் 
இந்தியா

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 7-வது நாளாக போராட்டம்

வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாபில் 7வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமிர்தசரசில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

DIN

வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாபில் 7வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமிர்தசரசில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாபில் பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு சார்பில் தொடர்ந்து 7-வது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

பஞ்சாபில் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை மூன்று மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், அவை சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

SCROLL FOR NEXT