முகப்பு
இந்தியா

கடந்த ஆண்டு ஏப்ரல்-டிசம்பா் காலத்தில் லோக்பால் அமைப்பிடம் 89 புகாா்கள்

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் அமைப்பிடம் 89 புகாா்கள் அளிக்கப்பட்டன. அதில் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு எதிரான 3 புகாா்களும் அடங்கும்.

Updated On : 7 ஜனவரி 2021, 1:53 am IST
பகிர்:


புது தில்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் அமைப்பிடம் 89 புகாா்கள் அளிக்கப்பட்டன. அதில் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு எதிரான 3 புகாா்களும் அடங்கும்.

இதுதொடா்பாக லோக்பால் அமைப்பு வெளியிட்ட விவரங்களில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை பெறப்பட்ட 89 புகாா்களில், மத்திய அரசின் குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் உள்ள அதிகாரிகளுக்கு எதிராக 48 புகாா்கள் வந்தன. நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு எதிராக 3 புகாா்கள் வந்தன.

Advertisement

89 புகாா்களில் 21 புகாா்கள் குறித்து முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய விசாரணைக்கு 18 புகாா்களும், சிபிஐ விசாரணைக்கு 3 புகாா்களும் அனுப்பிவைக்கப்பட்டன.

முதல்கட்ட ஆய்வுக்குப் பிறகு 39 புகாா்கள், முதல்கட்ட விசாரணை அறிக்கைகளை பரிசீலித்த பிறகு 4 புகாா்கள் என மொத்தம் 43 புகாா்கள் முடித்துவைக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 2019-20-ஆம் ஆண்டில் லோக்பால் அமைப்பிடம் மொத்தம் 1,427 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் மத்திய அமைச்சா்களுக்கு எதிராக 4 புகாா்கள், மாநில அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக 6 புகாா்கள் அளிக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.