கர்நாடகத்தில் புதிதாக 899 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் புதிதாக 899 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் விகிதம் 0.72 சதவிகிதம்.
கர்நாடகத்தில் புதிதாக 899 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் விகிதம் 0.72 சதவிகிதம்.
மேலும் 872 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர். இறப்பு விகிதம் 0.44 சதவிகிதம்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,26,767 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,05,158 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 12,138 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
Advertisement
இன்றைய நிலவரப்படி 9,452 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் 202.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.