ஆந்திரத்தில் 197, கர்நாடகத்தில் 751 பேருக்கு கரோனா
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆந்திரம்:
ஆந்திரத்தில் புதிதாக 197 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 8,85,234 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2411 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8,75,690 பேர் குணமடைந்துள்ளனர், 7,133 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
Advertisement
கர்நாடகம்:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 751 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,28,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,07,729 பேர் குணமடைந்துள்ளனர், 12,149 பேர் பலியாகியுள்ளனர். 8,909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.