முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 47,827 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 47,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 47,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பின் 2-ம் அலை தீவிரம் அடைந்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. 
இந்த நிலையில் மகாராஷ்டித்தில் புதிதாக மகாராஷ்டித்தில் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,04,076 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 24,126 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
கரோனாவுக்கு இன்று மேலும் 202 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,57,494 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 3,89,832 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments