மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஹர்ஷ வர்தன் நாளை ஆலோசனை
நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 1 லட்சத்துக்கும் மேலானோருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக ஒரேநாளில் 1 லட்சம் பாதிப்புகளை எட்டிய மூன்றாவது நாடு இந்தியா.
தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Advertisement
இந்த நிலையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
முன்னதாக, ஏப்ரல் 6-க்குப் பிறகு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.