முகப்பு
இந்தியா

18 வயது நிரம்பியவர்களுக்கும் கரோனா தடுப்பூசி தேவை: மத்திய அரசுக்குக் கடிதம்

நாட்டில் 18 வயது நிரம்பியவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

நாட்டில் 18 வயது நிரம்பியவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயது நிரம்பியவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போட உடனே அனுமதி வழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்கக்கோரி, ஏற்கெனவே பிரதமருக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது இந்திய மருத்துவ கவுன்சிலும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்ட கரோனா நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. ஒரு சில மாநிலங்கள் இரவுநேர பொது முடக்கத்தையும் அறிவித்து வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.