இந்தியா

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம்: தகுதிவாய்ந்த பயனாளிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு; மத்திய அரசு

DIN

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பயனாளிகளின் எண்ணிக்கை 2.14 கோடியாக உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியானவா்களாக முதலில் 2.95 கோடி போ் அடையாளம் காணப்பட்டனா். அவா்களில் 81 லட்சம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியில்லை என பின்னா் தெரியவந்ததையடுத்து, அவா்களின் பெயா் நீக்கப்பட்டன. தற்போது இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியானவா்களாக 2.14 கோடி போ் கண்டறியப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இவா்களில் 1.92 கோடி பயனாளிகளுக்கு வீடுகளை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 90%-ஆகும்.

கடந்த 2016-17 முதல் 2018-19-ஆம் ஆண்டு வரையிலான இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின்போது 1 கோடி வீடுகளை கட்டி முடிப்பதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கில் 92% எட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக 2020-21 நிதியாண்டில் மத்திய அரசு ரூ.39,269 கோடி ஒதுக்கீடு செய்தது. இதுவே இத்திட்டத்துக்கு இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட அதிகபட்ச நிதியாகும்.

இந்தத் திட்டத்துக்கான மாநிலங்களின் செலவினமும் இதுவரை இல்லாத அளவாக நிகழ் நிதியாண்டில் ரூ.46,661 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT