இந்தியா

ராமா் பாலம் வழக்கு:ஏப்.26-இல் விசாரணை

DIN


புது தில்லி: ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன்பு வியாழக்கிழமை ஆஜரான பாஜக மூத்த தலைவரும், இந்த வழக்கைத் தொடுத்தவருமான சுப்பிரமணியன் சுவாமி, ‘ராமா் பாலம் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் பதவியை நிறைவு செய்யும் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறுகையில், ‘அடுத்த தலைமை நீதிபதி (என்.பி. ரமணா) இந்த வழக்கு குறித்து முடிவு செய்யட்டும். இந்த வழக்கை விசாரிக்க அதிக நேரம் தேவைப்படும். எனக்கு போதிய நேரம் இல்லை’ என்று கூறி இந்த வழக்கை ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

கடந்த 2020, ஜனவரி 23-ஆம் இந்த வழக்கை கடைசியாக விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மூன்று மாதங்களுக்குள் சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT