இந்தியா

தெலங்கானாவில் 2 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா தினசரி பாதிப்பு 

DIN

தெலங்கானாவில் கரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
கரோனா தொற்றின் 2-ஆவது அலை நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,26,789  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 685 பேர் உயிரிழந்துள்ளனர். 
இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தெலங்கானாவில் கரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன்படி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,055 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,18,704ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவால் இன்று 7 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,741ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 13,362 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8,263 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 303 பேர் குணமடைந்தனர். இதுவரை 3,03,601 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT