முகப்பு
கரோனா வைரஸின் மிரளவைக்கும் புதிய அறிகுறிகள்
இந்தியா

கரோனா வைரஸின் மிரளவைக்கும் புதிய அறிகுறிகள்

கரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில், நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருவதோடு, மிரளவைக்கும் புதிய அறிகுறிகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
கரோனா வைரஸின் மிரளவைக்கும் புதிய அறிகுறிகள்
பகிர்:

பெங்களூரு: கரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில், நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருவதோடு, மிரளவைக்கும் புதிய அறிகுறிகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத் துறையினர் பல முக்கிய விஷயங்களை கொடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான தகவல்கள் அதிகம் பரவி வருகிறது. அதாவது, தற்போது மருத்துவமனைக்கு, கண் எரிச்சல் மற்றும் சிவந்த கண்கள், வாயுத் தொல்லை, அடிவயிற்றில் வலி, படபடப்பு, காதடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அதிகமான நோயாளிகள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின்போது ஏராளமான கரோனா நோயாளிகளுக்கு வாயுப் பிரச்னை ஏற்படுவதாகவும், இது புது அறிகுறியாக உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை மருத்துவர் பிந்துமத் கூறுகையில், அடிவயிற்றில் கடும் வலியுடனும், வயிற்றுப் போக்குடனும் அதிகமான நோயாளிகள் வருவதைப் பார்க்க முடிகிறது. இது நிச்சயமாக புதிய அறிகுறி இல்லை. ஆனால், கடந்த முறை கரோனா பாதித்தபோது கரோனா நோயாளிகளில் 2 சதவீதம் பேருக்குத்தான் இந்த பிரச்னை இருந்தது. ஆனால், தற்போது இது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என்கிறார்.

புதிய உருமாறிய கரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், எளிதாக நுரையீரலை பாதிப்பதாகவும், சுவாசப் பாதைகளை பாதிப்பதாகவும் உள்ளதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிகுறிகள் எல்லாம் முதல்முறை பாதிப்பின்போதும் இருந்தது. ஆனால் இந்த முறை அதிகமாக இருப்பதே அச்சம் கொள்ளும் விஷயமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
 
முழு கட்டுரையைப் படிக்க →