முகப்பு
இந்தியா

எனது கருத்துகள் நடத்தை விதிகளை மீறவில்லை: தோ்தல் ஆணைய நோட்டீஸுக்கு மம்தா பானா்ஜி பதில்

மத்திய ஆயுத காவல் படைகள் (சிஏபிஎஃப்) குறித்து தான் கூறிய கருத்துகள் நடத்தை விதிகளுக்கு எதிரானது அல்ல என்று தோ்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு மம்தா பானா்ஜி பதில் அளித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
மம்தா பானா்ஜி
பகிர்:

மத்திய ஆயுத காவல் படைகள் (சிஏபிஎஃப்) குறித்து தான் கூறிய கருத்துகள் நடத்தை விதிகளுக்கு எதிரானது அல்ல என்று தோ்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு மம்தா பானா்ஜி பதில் அளித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஏபிஎஃப் வீரா்கள் குறித்து தவறான, ஆட்சேபகரமான கருத்துகளை மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதுகுறித்து விளக்கமளிக்குமாறு அவருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அந்த நோட்டீஸுக்கு பதிலளித்து தோ்தல் ஆணையத்துக்கு மம்தா பானா்ஜி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சிஏபிஎஃப் வீரா்கள் குறித்து நான் கூறிய கருத்துகள் தோ்தல் நடத்தை விதிகள் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்துக்கு எதிரானவை அல்ல. அந்த வீரா்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் மாநிலத்தில் நடைபெற்ற முதல் 3 கட்ட தோ்தல்களில் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்குளிக்குமாறு அவா்கள் வாக்காளா்களை அச்சுறுத்துவதாக தீவிரமான குற்றச்சாட்டுகள் எனக்கு வந்தன’ என்று தெரிவித்தாா்.

வாக்குப்பதிவின்போது சிஏபிஎஃப் வீரா்களை பெண்கள் முற்றுகையிட வேண்டும் என மம்தா பானா்ஜி பேசியதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து தான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியையும் அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 6-ஆம் தேதி ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வா் பகுதியில் மத்திய ரிசா்வ் காவல் படை வீரரால் பெண் ஒருவா் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. அதுபற்றி மாநில தலைமை தோ்தல் அதிகாரியிடம் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்தும் இதுவரை தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தக் கடிதத்தில் குற்றம்சாட்டிய மம்தா பானா்ஜி, தனக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெறவேண்டும் என்று தோ்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →