இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 63 ஆயிரம் பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை இல்லாத அளவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 63,294 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,07,245 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 349 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 57,987 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 34,008 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 27,82,161 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 5,65,587 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேசமயம் இதுவரை இல்லாத அளவில் 2,63,137 பரிசோதனைகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

SCROLL FOR NEXT