கரோனா 2-ம் அலை மே மாதம் உச்சத்தைத் தொடும்: கர்நாடக அமைச்சர்
கரோனா இரண்டாம் அலை மே மாதம் உச்சத்தைத் தொடும் என அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை மே மாதம் உச்சத்தைத் தொடும் என அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் புதிதாக 10,250 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வல்லுநர்களுடனான கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது:
Advertisement
"மாநிலத்தில் கரோனா 2-ம் அலை மே முதல் வாரத்தில் உச்சத்தைத் தொடும். மே இறுதியில் படிப்படியாகக் குறையும். மகாராஷ்டிரம் போன்ற கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அவர்களது அறிவுறுத்தலின்பேரில் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்."
கர்நாடகத்தில் 69,225 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.