இந்தூரில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் 22ஆக அதிகரிப்பு 
இந்தியா

இந்தூரில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் 22ஆக அதிகரிப்பு

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் 22 ஆக அதிகரித்துள்ளது. 

ANI

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் 22 ஆக அதிகரித்துள்ளது. 

இதுதொடர்பாக தலைமை மருத்துவர் மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் பி.எஸ்செட்டியா கூறுகையில், 

இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 79,434 ஆக உள்ளது. 

தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,005 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் சுமார் 18 சதவீத பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. 

மருத்துவமனையில் கரோனா படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுமார் ஆறாயிரம் படுக்கை வசதிகள் உள்ள நிலையில், அவற்றில் 80 சதவீதம் இதுவரை நிரம்பியுள்ளன. 

மேலும் கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். 

இந்தூரில் கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 19 வரை 60 மணி நேர ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT