இந்தியா

ரஷ்ய கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி

DIN

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் ஏற்கெனவே கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், அவசர காலத் தேவைக்காக ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக வல்லுநர் குழு இன்று கூடி ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியானது 28 நாள்கள் இடைவெளியில் இரு தவணைகளாக மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று புணேவிலுள்ள சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் இரு தவணைகளாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT