இந்தியா

ராஜஸ்தானில் இரவு ஊரடங்கு

DIN

ஜெய்ப்பூர்: கரோனா பாதிப்பு காரணமாக ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை (ஏப்.16) முதல் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. 
இதுதொடர்பாக அந்த மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:  ராஜஸ்தானில் ஏப்.16 முதல் மாலை 6 மணி தொடங்கி காலை 5 மணி வரை இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும். சந்தைகள் மாலை 5 மணி வரை இயங்கும். அனைத்து கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் ஏப்.16 முதல் ஏப்.30 வரை மூடப்படும். திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்படும். நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதியில்லை. அலுவலகங்களில் கரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த அலுவலகம் 72 மணி நேரத்துக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT