முகப்பு
இந்தியா

ம.பி.யில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

கரோனா தொற்று பரவலின் காரணமாக மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
ம.பி.யில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு
பகிர்:

கரோனா தொற்று பரவலின் காரணமாக மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக நடைபெற இருந்த பள்ளி இறுதி வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஒத்தி வைப்பதற்கான  அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. 

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும்நிலையில் பொதுத்தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்தத் தேர்வுகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி இறுதி வாரம் வரை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →