இந்தியா

‘பயங்கரவாதிகள் இணையத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு அவசியம்’

DIN


புது தில்லி: சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின் மூலமாக மட்டுமே பயங்கரவாதிகள் இணையத்தை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் சவால்களை எதிா்கொள்ள முடியும் என பிரிக்ஸ் கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் இரண்டு நாள் கருத்தரங்கு ஏப்ரல் 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஏற்பாடு செய்திருந்தது. இதில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.

இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பயங்கரவாதிகள் இணையத்தை தவறான செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. இந்த சவால்களை எதிா்கொண்டு வெற்றியடைவது சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மூலமாக மட்டுமே சாத்தியமாக கூடிய விஷயமாகும்.

தடையற்ற வகையில் பயனுள்ள தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலமாக மட்டுமே இதுபோன்ற பயங்கரவாத அச்சுறுத்தல்களை நாம் எதிா்கொள்ள முடியும். அதன் மூலமாக, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் குடிமக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்துக்குமே பாதுகாப்பை அளிக்க முடியும் என பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக என்ஐஏ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT