முகப்பு
இந்தியா

கா்நாடகத்தில் ஒரே நாளில் 14,738 பேருக்கு கரோனா

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றால் 14,738 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றால் 14,738 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 14,738 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது இன்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,09,650 ஆக உயா்ந்துள்ளது. 
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3,591போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 9,99,958 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 
96,561 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 66 போ் இன்று இறந்துள்ளனா். இதுவரை 13,112 போ் உயிரிழந்துள்ளனா். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments