முகப்பு
இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங்-க்கு கரோனா பாதிப்பு

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான திக் விஜயசிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான திக் விஜயசிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தில்லியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். 

சமீபமாக தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும், கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

நாட்டில் பெரும்பாலாக அனைத்து மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள் பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,17,353 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 1,185 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments