ஒடிசாவில் மேலும் 3108 பேருக்கு கரோனா
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3108 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், 837 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3108 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், 837 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றின் 2-ஆவது அலை நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,17,353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 1185 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3108 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,61,450 ஆக அதிகரித்துள்ளது. அதில், 16,889 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து, 3,42,570 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1638 ஆக உயர்ந்துள்ளது.