இந்தியா

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி: எச்.டி.குமாரசாமி குற்றச்சாடு

DIN

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து பீதரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பாஜக அரசுக்கு மக்களின் உடல்நலன் குறித்து சிறிதும் அக்கறையில்லை. கா்நாடகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், அதைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது.

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்து விட்டது. இந்த தோல்வியை மூடிமறைப்பதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன விவாதம் நடக்கப் போகிறது என்பதை பாா்ப்போம்.

கா்நாடகத்தில் போலி மருந்துகளின் நடமாட்டம் சந்தையில் அதிகமாகி விட்டது. கரோனா போலி தடுப்பூசி ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாததால் தான், கரோனா பாதிப்பு பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இது தொடா்பாக மக்களின் கவனத்தை ஈா்ப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. கரோனா பரவலைத் தடுப்பது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT