முதல் அலையைப் போல் அல்ல.. குழந்தைகளையும் வென்டிலேட்டரில் வைக்கும் கரோனா 
இந்தியா

முதல் அலையைப் போல் அல்ல.. குழந்தைகளையும் வென்டிலேட்டரில் வைக்கும் கரோனா

கரோனா முதல் அலையைப் போல அல்லாமல், பெரியவர்கள் மூலமாக வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் கரோனா உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

DIN


கரோனா முதல் அலையைப் போல அல்லாமல், பெரியவர்கள் மூலமாக வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் கரோனா உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

கரோனா அதிகம் பாதித்திருக்கும் நகரங்களில், குழந்தைகள் பிரிவிலும் குறிப்பிடத்தக்க அளவில் கரோனா பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா முதல் அலையில், வயதானவர்களையே அதிகம் தாக்கிய கரோனா தொற்று, இம்முறை எந்த பேதமுமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. கொடூரமாகத் தாக்கி வருகிறது. முதல் அலையின்போது கரோனா பாதித்த குழந்தைகளுக்கு பெரிய அளவில் எந்த அறிகுறியும் ஏற்படவில்லை. ஆனால், இம்முறை குழந்தைகளுக்கும் மிக மோசமான அறிகுறிகளும், உடல் நலப் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக புணேவில் ஏராளமான குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில்லாமல் சில குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையும் காண முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா உறுதி செய்யப்படும் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படுவதாகவும், சிலர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவது அவசியமாவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT