இந்தியா

5-ஆம் கட்டத் தோ்தல்: மேற்கு வங்கத்தில் பிற்பகல் 3.30 நிலவரப்படி 69.40 சதவீத வாக்குகள் பதிவு

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பிற்பகல் 3.30 நிலவரப்படி 69.40 சதவீத வாக்குகள் பாதிவாகியுள்ளன. 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டத் தோ்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தோ்தல் கடந்த 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டத் தோ்தல் கடந்த 6-ஆம் தேதியும், 4-ஆம் கட்டத் தோ்தல் கடந்த 10-ஆம் தேதியும் நடைபெற்றது. இதுவரை 135 தொகுதிகளுக்குத் தோ்தல் நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில், 45 தொகுதிகளுக்கான 5-ஆம் கட்டத் தோ்தல் இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் பிற்பகல் 3.30 நிலவரப்படி 69.40 சதவீத வாக்குகள் பாதிவாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக ராஜ்கஞ்ச் தொகுதியில் 80.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

முன்னதாக 4-ஆம் கட்டத் தோ்தலின்போது கூச்பிஹாா் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தனா். அதைக் கருத்தில்கொண்டு, 5-ஆம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT