இந்தியா

கரோனா பரவல் எதிரொலி: மேற்கு வங்கத்தில் இரவு நேரபிரசாரத்துக்கு கட்டுப்பாடு

DIN

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரசியல் கட்சிகள் இரவு நேரத்தில் பிரசாரம் செய்வதற்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அரசியல் கட்சிகள் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

இதற்கு முன்பு இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரவு 7 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

வழக்கமாக, வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பிரசாரம் நிறைவு செய்யப்பட்டு வந்த நிலையில், எஞ்சிய 3 கட்ட தோ்தல்களில் 72 மணி நேரத்துக்கு முன்பே பிரசாரத்தை முடித்துக் கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குப் பதிவுக்கு முந்தைய 72 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரம் மேற்கொள்ள முடியாது என்று தோ்தல் ஆணையத்தின் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT