தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் 
இந்தியா

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை.. உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் (விடியோ)

ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை, தனது உயிரைப் பணயம் வைத்து ரயில்வே ஊழியர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN


ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை, தனது உயிரைப் பணயம் வைத்து ரயில்வே ஊழியர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மண்டலத்துக்குள்பட்ட வாங்கனி ரயில் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம், நடைமேடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை ரயில்வேயின் சுட்டுரைப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.


அதில், தனது தாயுடன் சிறுவன் ஒருவன் நடைமேடையில் நடந்துச் சென்று கொண்டிருக்கிறான். அப்போது நடைமேடையின் ஓரத்தில் நடந்துச் சென்ற சிறுவன், திடீரென கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட, அப்போது மிக வேகத்தில் அதே தண்டவாளத்தில் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ரயில்வே ஊழியர், ஒரு நொடி கூட தாமதிக்காமல், தன்னுயிரை பணயம் வைத்து ஓடிச் சென்று அந்த சிறுவனை நடைமேடையில் இருந்த தாயிடம் தூக்கிவிட்டு, ரயில் அவ்விடத்தைக் கடந்து செல்ல ஒரு சில நொடிகளே இருந்த நிலையில் தானும் நடைமேடை மீது ஏறி, தன்னையும் தற்காத்துக் கொண்டு பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தார்.

மிக மோசமான நேரத்தில் சாமர்த்தியமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவின் தீரத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT