இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 6 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா

DIN

ஜம்மு-காஷ்மீரில் 6 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் பதர்வா பகுதியில் 240 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் தோடா பகுதியில் 3,553 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், பதர்வா பகுதியிலுள்ள செளகம் சந்தையில் மருத்துவக் குழு காவல்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தையில் ஏராளமான புலம்பெயர்த் தொழிலாளர்கள் சந்தையில் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.

அவர்களுக்கும், அங்குள்ள உள்ளூர் மக்களுக்கும் ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 240 புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT