’கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குங்கள்’: பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்
கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கரோனா தடுப்பூசி நிறுவனமான சீரம் தடுப்பூசியின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
அதன்படி, தற்போது விற்கப்படும் கரோனா மருந்தான கோவிஷீல்டு தடுப்பூசி விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மாநில அரசுகளுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கரோனா தடுப்பூசி மொத்தத் உற்பத்தியில் 50 சதவீத உற்பத்தியை மத்திய அரசும், 50 சதவீத உற்பத்தியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்குமாறும் விதிக்கப்பட்டுள்ள புதிய விதியை நீக்கக்கோரியுள்ள பினராயி விஜயன் தடுப்பூசிகளை மத்திய அரசு முழுவதுமாக கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு விநியோகிக்க வலியுறுத்தியுள்ளார்.