இந்தியா

நாட்டில் 3 லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கரோனா பாதிப்பு; மேலும் 2,023 பேர் பலி

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,023 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். 

நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 2.95 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,56,16,130 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கரோனா பாதித்த 2,023 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,82,553 ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 1,67,457 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039. தற்போது 21,57,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் இதுவரை 13,01,19,310 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

SCROLL FOR NEXT