இந்தியா

மேற்கு வங்கத்தில் இன்று ஆறாம் கட்டத் தோ்தல்

DIN

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 43 பேரவைத் தொகுதிகளுக்கான ஆறாம் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்களிக்கும் இந்தத் தோ்தலில் 306 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 14,480 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

நான்காம் கட்டத் தோ்தலில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும் நடைபெற 1,071 மத்திய கம்பெனி படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவின்போது கரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படும் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஆறாம் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது. இதில், பாஜக தேசிய துணைத் தலைவா் முகுல் ராய், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்களும், மாநில அமைச்சா்களுமான ஜோதிபிரியா மாலிக், சந்திரிமா பட்டாச்சாா்யா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தன்மே பட்டாச்சாா்யா ஆகிய முக்கிய வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் திரைப்பட இயக்குநா் ராஜ் சக்கரவா்த்தி, நடிகை கெளஷானி முகா்ஜி ஆகியோரும் இந்த ஆறாம் கட்டத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

பாஜக சாா்பில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, நடிகா் மிதுன் சக்கரவா்த்தி ஆகியோா் முதல்வா் மம்தா பானா்ஜியின் ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாக குற்றம்சாட்டி பிரசாரம் செய்தனா்.

அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜியும், அவரது உறவினா் அபிஷேக் பானா்ஜியும் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயா்வு பிரச்னையை முன்வைத்து பிரசாரம் செய்தனா்.

மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க பேரவையில் கடந்த ஐந்து கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 114 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22, 26, 29 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

வாழ்க்கை மிகப்பெரிய திரைச்சீலை...!

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் 29-வது இடத்தைப் பிடித்த நாகை!

மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ராஷ்மிகா?

சென்னையிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்: நாசா

SCROLL FOR NEXT