முகப்பு
இந்தியா

ஹரியாணா மருத்துவமனையிலிருந்து 1,710 டோஸ் கரோனா தடுப்பூசி திருட்டு

ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் உள்ள பிபிசி மையத்தில் இருந்து 1,710 டோஸ் கரோனா தடுப்பூசி திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் உள்ள பிபிசி மையத்தில் இருந்து 1,710 டோஸ் கரோனா தடுப்பூசி திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவிஷீல்டு டோஸ் 1,270 மற்றும் கோவாக்சின் 440 டோஸ்கள் மருத்துவமனையில் இருந்து திருடு போயுள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார். 

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறினார். 

காவல்துறை தரப்பிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.